சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை பாதியாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
மல்லி மிளகு சீரகம் பூண்டு இஞ்சி மிளகாய் வற்றல் அனைத்தையும் 1 நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
- 4
அதனை மிக்ஸியில் முதலில் பொடித்துக் கொள்ளவும் பின் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
- 5
மஸ்ரூம் உடன் தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா தூள் அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 6
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
வெங்காயம் வதங்கியவுடன் அதன்மேல் ஊறவைத்த மஸ்ரூம் ஐ சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்
- 8
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
- 9
சூடாக பரிமாறவும்.
- 10
தண்ணீர் இல்லாமல் கெட்டியாகவும் வைத்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14220892













கமெண்ட்