துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Jan1

*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் துவரம்பருப்பு
  2. 4முள்ளங்கி
  3. 8 முதல் 10 சின்ன வெங்காயம்
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. ஒரு தக்காளி
  6. புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
  7. 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  8. ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. தாளிப்பதற்கு
  12. ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  14. கருவேப்பிலை சிறிதளவு
  15. பெருங்காயத்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பை கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வேகவைக்கவும். படத்தில் காட்டியவாறு காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் முள்ளங்கியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி தக்காளி பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் தூள் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வதங்கிய பிறகு புளித் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  4. 4

    இப்பொழுது முள்ளங்கி வெந்து பச்சை வாசனை போனபிறகு வேக வைத்து மசித்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மற்றும் கமகமக்கும் வாசனையுடன் மண்பானையில் செய்த துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes