சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. பேஸ்ட் செய்ய:
  3. 1 மேஜை கரண்டி உளுந்து
  4. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  5. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
  6. 1 மேஜை கரண்டிமிளகு
  7. 1 தேக்கரண்டி கசகசா
  8. 5 கார வர மிளகாய்
  9. ½ கப் தேங்காய் துண்டுகள்
  10. 2அங்குலம் இஞ்சி, தோலுரித்தது
  11. 4 பூண்டு
  12. சாம்பார் செய்ய:
  13. 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்
  14. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  15. 1 தேக்கரண்டிகடுகு
  16. 1 தேக்கரண்டிவெந்தயம்
  17. ½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி
  18. ¼ தேக்கரண்டிகறிவேப்பிலை
  19. 4காரமான ஊசி மிளகாய், சின்ன சின்ன தாக நறுக்கியது
  20. 2சக்கரை வள்ளி கிழங்கு, நறுக்கியது
  21. 3 கப் தக்காளி துண்டுகள்
  22. 1 மேஜைகரண்டி சாம்பார் பொடி-நான் தயாரித்தது (பருப்புகள், உணவு மூலிகைகள், சீரகம், வெந்தயம், மிளகு, முதலியன)
  23. தேவையானஉப்பு
  24. ¼ கப் கொத்தமல்லி,,பொடியாக நறுக்கியது
  25. சாம்பார் சாதம் செய்ய:
  26. 2 கப் சாதம்
  27. 2 மேஜை கரண்டி நெய்
  28. 4 கப் சாம்பார்
  29. பச்சடி செய்ய
  30. 2 கப் தயிர்
  31. 1 கப் துருவிய வெள்ளரிக்காய்
  32. 1 தேக்கரண்டி பச்சை மிளகாய், துருவியது
  33. 1 தேக்கரண்டி பச்சை இஞ்சி துருவியது
  34. 1 மேஜைகரண்டி கொத்தமல்லி,,பொடியாக நறுக்கியது
  35. தேவையானஉப்பு
  36. 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்
  37. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  38. 1 தேக்கரண்டிகடுகு
  39. ¼ தேக்கரண்டி வெந்தயப் பொடி
  40. ½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி
  41. 10 கறிவேப்பிலை
  42. மதிய உணவு:  சாம்பார், பச்சடி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்/

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்/

  3. 3

    சக்கரை வள்ளி கிழங்கை முக்கால் வேக்காடு குக்கறில் வேகவைக்க பின் துண்டாக்கி கொள்ளுங்கள்
    3 கப் நீருடன் சேர்த்து பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.
    பருப்பு வெந்துகொண்டிருக்கும் பொழுது பேஸ்ட் தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
    வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி கூட சேர்த்து அறை

  4. 4

    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள், சேர்த்து வதக்குங்கள், தக்காளி துண்டுகள் சேர்க்க. வதக்க 4 நிமிடங்கள் 6 கப் நீர், புளி பேஸ்ட் சேர்ததுக்கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. சாம்பார் பொடி சேர்க்க.வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற. கொதித்த பின் சக்கரை வள்ளி கிழங்கை சேர்த்து கிளற. 5 நிமிடங்கள்

  5. 5

    5 நிமிடங்கள் அடுப்பின் மேல். கொதிக்கட்டும்.
    கொதித்த பின் பேஸ்ட் சேர்த்து கிளற உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி, அலங்கரித்தேன்.
    சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார். சாதத்துடன் நெய், 4 கப் சாம்பார் சேர்த்து கலந்து பரிமாறுக.
    பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்.

  6. 6

    பச்சடி செய்ய:
    வெள்ளரிக்காய் தோலில் ஏகப்பட்ட சத்துக்கள்
    ஒரு கிண்ணத்தில் வெள்ளரிக்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய், இஞ்சி, வெந்தயப் பொடி. உப்பு சேர்த்து மிக்ஸ் செய்க.
    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு, கரிவிரப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். தாளிக்கையை கிண்ணத்தில் சேர்த்து மிக்ஸ் செய்க. கொத்தமல்லி தூவுக பச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes