முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

MuthulakshmiPrabu
MuthulakshmiPrabu @muthuprabu1416
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. முருங்கைக்காய்- 1 பெரியது
  2. எண்ணெய்- தேவையான அளவு
  3. கடுகு உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
  4. வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
  5. கருவேப்பிலை- சிறிதளவு
  6. சின்ன வெங்காயம்- 10
  7. தக்காளி- 2
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு
  10. பூண்டு- 4 பள்
  11. சீரகம்- 1 டீஸ்பூன்
  12. மசால் பொடி- 2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தேங்காய் துண்டுகள், சீரகம், பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் முருங்கைக்காய் சேர்க்கவும்.. அதனுடன் புளி தண்ணீர், உப்பு சேர்த்து முருங்கைகாயை நன்கு வேகவிடவும்.

  5. 5

    முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.. நன்கு கொதிக்கவிட்டு பின்பு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

  6. 6

    இப்பொழுது முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயாராகிவிட்டது.. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MuthulakshmiPrabu
MuthulakshmiPrabu @muthuprabu1416
அன்று

Similar Recipes