தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 150 கிராம் கேரட்
  2. 100 கிராம் பீன்ஸ்
  3. 100 கிராம் உருளைக்கிழங்கு
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 பச்சை ‌மிளகாய்
  8. 1/4 மூடி தேங்காய்
  9. 4 ஸ்பூன் பால்
  10. 1 ஸ்பூன் மல்லி தூள்
  11. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1 ஸ்பூன் கரம் மசாலா
  13. 25 மில்லி எண்ணெய்
  14. 1/2 ஸ்பூன் சோம்பு
  15. தாளிக்க:
  16. 1 பட்டை
  17. 1பிரெஞ்ச் இலை
  18. சிறிதுஅளவு கொத்தமல்லி
  19. சிறிதுஅளவு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மிக்சியில் தேங்காய், பச்சை ‌மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு குக்கரில் நறுக்கிய கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு, கல் உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரஞ்ச் இலை, சோம்பு, வெங்காயம், கருவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, பால் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்ப பிறகு அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

  6. 6

    இப்பொழுது சுவையான கேரட் பீன்ஸ் குருமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes