சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். தக்காளி 2 கழுவி நறுக்கி வைக்கவும்.கேரட் 2 தோல் நீக்கி, பீன்ஸ் 7 கழுவி நறுக்கி வைக்கவும்.தாளிக்க பட்டை 1,ஏலக்காய் 2,கிராம்பு 2,சீரகம் 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல் மசாலா அரைக்க 3 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.
- 2
தேங்காயுடன் சோம்பு 1/2 டீஸ்பூன்,முந்திரி 4, கசகசா 1/2 டீஸ்பூன்,இஞ்சி 1/2 இன்ச்,2 பச்சை மிளகாய் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி தழை கழுவி எடுத்து வைக்கவும்.
- 3
கருவேப்பிலை சிறிது கழுவி எடுத்து வைக்கவும்.குக்கரில் தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு பட்டை கிராம்பு,ஏலக்காய்,சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை வதக்கி,
- 4
பொன்னிறமானவுடன், தக்காளி,நறுக்கிய கேரட் பீன்ஸ் 2 நிமிடம் வதக்கி தனியா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து கிளறி விடவும்.
- 5
உப்பு, தண்ணீர் சிறிது விட்டு அரைத்த விழுதை சேர்த்து கலக்கி விடவும்.
- 6
நன்கு கலக்கி குக்கரில் 2 விசில் வேக விடவும்.குக்கரில் இருந்து கிண்ணத்திற்கு மாற்றி கொத்தமல்லி தூவி எலுமிச்சை சாறு 2 துளி விட்டு கலக்கி பரிமாறவும்.
- 7
இட்லி தோசை இடியப்பம் சப்பாத்திக்கு ஏற்றது.டேஸ்ட் சூப்பர்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
-
-
-
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
-
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
-
More Recipes
கமெண்ட்