மசாலா  மினி சப்பாத்தி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கோதுமைமாவு 200கிராம் பால்,தண்ணீர், தேங்காய் எண்ணெய், உப்பு தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி போட பிசையவும். வெங்காயம் பெரியது 4 வெட்டவும். எல்லா நறுமணப் பொருட்கள் தூள் செய்யவும். பட்டை,கிராம்பு,சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு, கொஞ்சம் மிளகு.சப்பாத்தி போட்டு எண்ணெய் விட்டு தாளித்த வெங்காயம், மஞ்சள், உப்பு ,போட்டு தாளித்து அதை நடுவில் வைத்து மடித்து மூடி மீண்டும் வட்டமாக தட்டவும். இதை இட்லி கொப்பறையில் வேகவைக்கவும். பின் தோசைக்கல்லில் இதை வைத்து எண்ணெய் ஊற்றி சுடவும். தொட்டுக்கொள்ள சாஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம்கோதுமைமாவு
  2. தேவையான அளவுஉப்பு நெய்,மாவு பிசைய சிறிதளவு தண்ணீர்
  3. இரண்டு ஸ்பூன்எல்லா நறுமணப் பொருள் சமமாக

சமையல் குறிப்புகள்

  1. 1

    சப்பாத்தி மாவு பிசையவும்

  2. 2

    பெரியவெங்காயம் பொடியாக வெட்டவும். மிக்ஸியில் நறுமணப் பொருட்கள் திரிக்கவும். வெங்காயம் மிளகாய் பொடி,மஞ்சள் தூள்,கடுகு,உளுந்து, பொதினா, மல்லி இலை,திரித்த பொடி உப்பு போட்டு தாளிக்கவும். வெங்காயம் நன்றாக வேகவும்

  3. 3

    மிளகாய்பொடி உப்பு வாசனைப்பொடி சேர்க்கவும்

  4. 4

    சப்பாத்தி போட்டு நடுவில் வெங்காயம் வைக்கவும்

  5. 5

    பின் சேலை மடிப்பு மாதிரி சப்பாத்தி யை மடித்து அதிக மாவு நீக்கி திரும்ப வட்டமாக த் தட்டவும்

  6. 6

    இதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி மசாலாவைத்த மினி சப்பாத்தி யை வேகவைக்கவும்

  7. 7

    எடுத்து தோசைக்கல்லில் நெய் ஊற்றி சுடவும். அருமையான மினி சப்பாத்தி

  8. 8

    சப்பாத்தி யை நீள் செவ்வகமாகவும் நான்கு பக்கமும் மடித்தும் வேகவைத்து சுடவும். தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes

More Recommended Recipes