இறால் பிரியாணி

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

இறால் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  1. 1/2 கிலோ இரால்
  2. 3/4 கிலோ அரிசி
  3. தேவையானஅளவு உப்பு
  4. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 4 பச்சை மிளகாய்
  7. 1கைப்பிடி கொத்தமல்லி
  8. ஒரு கைப்பிடி புதினா
  9. 2 பெரிய வெங்காயம்
  10. 2 தக்காளி
  11. 1 இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. 10 சின்ன வெங்காயம்
  13. 7 ஸ்பூன் நெய்
  14. சிறிதளவுபட்டை கிராம்பு ஏலக்காய் இலை
  15. ஒரு பக்கெட் பிரியாணி மசாலா
  16. 4 டம்ளர் தண்ணீர்
  17. அரை மூடி எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரைக்கிலோ இறாலில் சிறிதளவு உப்பு சேர்க்கவும் பின் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பின் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் நன்கு ஊறவிடவும்

  3. 3

    மிக்ஸியில் 2 மிளகாய் ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் நன்கு அரைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்

  5. 5

    பிறகு 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் பின் பட்டை கிராம்பு ஏலக்காய் இலை சேர்த்து கொள்ளவும்

  7. 7

    பிறகு 2 பச்சைமிளகாய் 2 பெரிய வெங்காயம் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும்

  8. 8

    2 தக்காளி தேவையான அளவு உப்பு ஒரு பாக்கெட் பிரியாணி மசாலா சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    பிறகு ஊற வைத்த இறால் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  10. 10

    பிறகு அரை மூடி எலுமிச்சை பழம் முக்கால் கிலோ அரிசி 5 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்

  11. 11

    பிறகு குக்கரை மூடி1 விசில் விட்டு 5 நிமிடம் லோ பிலேமில் வைத்திருக்க வேண்டும்

  12. 12

    ஆனியன் ரைத்தா:
    ஒரு பாத்திரத்தில் தயிர் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து கொள்ளவும்

  13. 13

    பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.....

    சுவையான இறால் பிரியாணி ரெடி.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes