கறிவேப்பிலை இஞ்சி பூண்டு  மசாலா ரசம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

கறிவேப்பிலை இலைகள் நான் வளர்க்கும் மரத்தின் இலைகள். கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சரியாக வைக்கும். சக்கரை வியாதி தடுக்கும். கண்களுக்கும். தோலிர்க்கும் நல்லது பூண்டு, இஞ்சி, தக்காளி, மஞ்சள், மிளகு பல கொடிய வியாதிகளை தடுக்கும். சின்னமோன் கொழுப்பை குறைக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது; ஆரோகியதிர்க்கு மிகவும் நல்லது. உண்மையாகவே இது சாத்தமுதுதான்.
#refresh1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மசாலா பேஸ்ட் செய்ய:
  2. 4தேக்கரண்டி மிளகு
  3. ½தேக்கரண்டி வெந்தயம்
  4. ½தேக்கரண்டி கஸ கஸா
  5. 1அங்குலம் இலவங்கப்பட்டை
  6. 4கிராம்பு
  7. 2ஸ்டார் அனிஸ்
  8. 6பல் பூண்டு
  9. 6 மேஜைக்கரண்டி தேங்காய் துண்டுகள்
  10. ¼ கப் கறிவேப்பிலை இலைகள்
  11. மற்றவை:
  12. 1 மேஜை கரண்டி நல்லெண்ணை
  13. 1 தேக்கரண்டி கடுகு
  14. 1 தேக்கரண்டி சீரகம்
  15. சிட்டிகை பெருங்காயம்
  16. 4உலர்ந்த மிளகாய்
  17. ½கப் தக்காளி தூண்டுகள்
  18. 2கப் பருப்பு வேகவைத்த நீர்
  19. 1மேஜைகரண்டி ரச பொடி (தனியா, ஒமம், சீரகம், பருப்புகள் (கடலை, துவரம், உளுந்து) வறுத்து பொடித்தது)
  20. 1/4கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  21. தேவையானஉப்பு
  22. ரசம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நல்ல ரேசிபியை உருவாக்குவூதான் முதல் ஸ்டெப்; எளிதில் செய்யக்கூடிய, நலம் தரும் நிறைந்த உணவு பொருட்களை, நல்ல முறையில் சமைப்பது. செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  3. 3

    பேஸ்ட் செய்ய: தேவையான பொருட்களை மிக்ஸியில் 2 கப் நீர் சேர்த்து அரைக்க.
    ரசம் செய்ய:
    மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணை யில் கடுகு, பொறிக்க. சீரகம் பெருங்காயம் தாளிக்க; மிளகாய், தக்காளி சேர்த்து வதக்க பேஸ்டை சேர்த்து கொதிக்க வைக்க. பச்சை வாசனை போகட்டும்.

  4. 4

    8 கப் நீர் பருப்பு வேகவைத்த தண்ணிர் 2 கப் சேர்க்க. கொதிக்கட்டும், ரசப் பொடி சேர்த்து கலக்க. மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க. உப்பு, சேர்க்க, ரசம் கெட்டியாக இருக்க கூடாது; தண்ணியாக இருக்கவேண்டும் கொத்தமல்லி தூவுக
    ரசம் தயார்.. வாசனையோ வாசனை! ருசித்துப் பார்த்து அருந்துக. ருசியோ ருசி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes