எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 6முட்டை
  2. 2பெரிய வெங்காயம்
  3. ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு
  4. ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  5. 2 ஸ்பூன் ரெட் சில்லி பவுடர்
  6. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  9. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  10. தேவையான அளவு எண்ணெய்
  11. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும்.

  2. 2

    அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு கலக்கவும்

  3. 3

    கேரியர் பாக்ஸ் மாதிரியான ஒரு டப்பாவில், எண்ணெய் ஊற்றி தடவி வைக்கவும். கலக்கி வைத்த முட்டையை அதில் ஊற்றவும்.

  4. 4

    அடுப்பை பற்ற வைத்து கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் டப்பாவில் வைத்த முட்டையை மூடி வைக்கவும்.

  5. 5

    அதை அரை மணி நேரம் வேகவிடவும். பின்பு அந்த டப்பா முட்டை எடுத்து அதை கட்டங்கட்டமாக வெட்டவும்.

  6. 6

    ஒரு பிளேட்டில் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன் ரெட் சில்லி பவுடர் சேர்க்கவும்.

  7. 7

    அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரக தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  8. 8

    ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

  9. 9

    சதுரமாக வெட்டிய முட்டையை கலவையில் போட்டு பிரட்டி வைக்கவும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  10. 10

    எண்ணை காய்ந்தவுடன் பிசைந்து வைத்த முட்டையை எண்ணெயில் இரண்டு மூன்றாக போட்டு எடுக்கவும். சுவையான Egg 65 ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes