முட்டை குருமா(egg kurma recipe in tamil)

ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA

முட்டை குருமா(egg kurma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. 2 முட்டை
  5. 1 துண்டு பட்டை
  6. 3 ஏலக்காய்
  7. 2 கிராம்பு
  8. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  12. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  13. தேவையான அளவுஉப்பு
  14. 1/4 மூடி தேங்காய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், மல்லித்தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தேங்காயை நைசாக அரைத்து சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    குருமா நன்கு கொதித்ததும் இரண்டு முட்டையை அதில் உடைத்து ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும் 10 நிமிடம் கழித்து முட்டையை திருப்பிப் போட்டு அடுப்பை அணைத்து விடவும் இப்போது முட்டை குருமா பரிமாறு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA
அன்று

Top Search in

Similar Recipes