அடுப்பில்லாமல் உடனடியாக செய்த கேக்(Firefree Instant Cake)

இந்த லாக்டோன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, உடனடியாக செய்யும் அடுப்பே தேவைப்படாத கேக் செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 12 பிரட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். ஓரங்களை மட்டும் தனியே வெட்டி எடுக்கவும். பிறகு க்ரீம் பிஸ்கட் க்ரீமை தனியே பிரித்து எடுத்து வைக்கவும். (சாக்லேட் ஃப்ளேவர் மற்றும் வெள்ளை கிரீம் கொண்ட எந்த பிஸ்கட் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்)
- 2
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து வைக்கவும். பிஸ்கட் கிரீமில் நான்கு துண்டுகளை மட்டும் தனியே(அலங்கரிக்க) எடுத்து வைக்கவும்.
- 3
மீதமுள்ள கிரீமில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
- 4
பிறகு எட்டு பிரட் துண்டுகளை மட்டும், ஒரு பக்கத்தை வட்ட வடிவமாக (படத்தில் காட்டியவாறு) வெட்டி எடுக்கவும். மற்ற நான்கு துண்டுகள் சதுர வடிவமாகவே இருக்கட்டும்.
- 5
பிஸ்கட்களை மிக்ஸி ஜாரில் பவுடர் செய்து, சிறிது சிறிதாக பால் சேர்த்து, நன்றாக க்ரீம் பதத்திற்கு கொண்டு வரவும்.
- 6
பிறகு கேக் செய்யும் பிளேட்டில் நடுவே இந்த கிரீமை சிறிதளவு தடவவும். அதன்மேல் நாம் வெட்டி வைத்த பிரட் துண்டுகளில் சதுர வடிவத்தை நடுவே வைத்து வட்ட வடிவங்களை இரு ஓரங்களிலும் வைக்கவும். அதன் மேல் நாம் தயார் செய்து வைத்த சர்க்கரை சிரப்பை நன்றாக ஊறும் படி தடவவும். (இதனால் பிரட் சாஃப்டாக இருக்கும்)
- 7
பிறகு அதன் மேல் நாம் செய்து வைத்த சாக்லேட் கிரீமை நன்றாக தடவவும். இதேப் போல் மீண்டும் பிரெட் துண்டுகள் அடுக்கி சர்க்கரை சிரப் தடவி, மொத்தமாக நான்கு அடுக்குகள் வருமாறு தயார் செய்யவும்..
- 8
எல்லா ஓரங்களிலும் படும்படி சாக்லேட் க்ரீமை ஒன்றுபோல் தடவி 30 நிமிடங்களுக்கு, செட் ஆவதற்காக பிரிட்ஜில் வைக்கவும். பிறகு நாம் செய்து வைத்திருந்த வெள்ளை க்ரீமை பைப்பிங் பேக்கில் போட்டு அலங்கரிக்கவும்.
- 9
முதலில் தனியே எடுத்து வைத்த 4 துண்டு வெள்ளை கிரீமையும் இதில் சுற்றி வைத்து, பூ போன்று அலங்கரித்து பரிமாறவும்.
அடுப்பே இல்லாமல் உடனடியாக செய்த சுவையான கேக் ரெடி 😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


திடீர் பொரித்த சுவீட்(Instant Fried Sweet recipe in Tamil)


2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்


தேங்காய் பர்பி


சாரா ஜாமுன்#lockdown #book


வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)


டோரா கேக் (Dora cake recipe in tamil)


வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


ஈஸீ முட்டையில்லா சக்கோ லாவா கேக்


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil


மக் கேக் (Mug cake recipe in tamil)

கமெண்ட் (4)