3 இன் 1 துவையல்

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#colours2
புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி துவையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பெரிய வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 5 பச்சை மிளகாய்
  4. 3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1டீஸ்பூன் உளுந்து
  6. ஒரு கட்டு கொத்தமல்லி
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. சிறிதளவு புதினா இலை
  9. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையான அளவு உப்பு
  11. சிறிதளவுபுளி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,உளுந்து போட்டு சிவந்ததும்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,.....பின் அதனுடன் தக்காளி, தேவையான அளவு உப்பு, சேர்த்து வதக்கவும்,.... தக்காளி முக்கால்வாசி வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்,......

  2. 2

    தேங்காய்த் துருவல் சேர்த்து வதங்கிய உடன்,கடைசியாக கருவேப்பிலை,புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும்,.....

  3. 3

    ஆறிய கலவையுடன், சிறிதளவு புளி சேர்த்து, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைக்கவும்,.... ஆரோக்கியமான கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சேர்த்த துவையல் இட்லி தோசையுடன் சாப்பிட தயார்,.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes