நலம் தரும் பாகற்காய் வத்தல் குழம்பு

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#keerskitchen #vattaram

வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கவலையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல.மலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். நான் செய்த ஸ்பெஷல் வத்தல் குழம்பு பொடி . என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. எண் விருப்பம் போல தான் செய்வேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6பரிமாறுவது
  2. 2 மேஜை கரண்டி நல்லெண்ணை
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 1/2 தேக்கரண்டிமெந்தயம்
  5. 1 தேக்கரண்டிசீரகம்
  6. ஒரு சிட்டிகை பெருங்காயம்,
  7. ¼ கப் கறிவேப்பிலை
  8. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  9. 1 மேஜை கரண்டி துவரம் பருப்பு
  10. 4 சிறிய அப்பள துண்டுகள்,
  11. 1கப் வத்தல்கள்,
  12. 2கார மிளகாய்
  13. 1கப் தக்காளி நறுக்கியது
  14. ½ தேக்கரண்டி மஞ்சள்
  15. ¼ கப் வேக வைத்த துவரம் பருப்பு
  16. 1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  17. 1 தேக்கரண்டி பொடித்த வெல்லம்
  18. 1 மேஜைகரண்டி வத்தல் குழம்பு பொடி
  19. 1 மேஜை கரண்டி கடலை மாவு
  20. 1 தேக்கரண்டிகஸ்தூரி மெதி
  21. தேவையானஉப்பு
  22. வத்தல் குழம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.

  2. 2

    தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான கடாயில் சூடான எண்ணையில் கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளிக்க. கடலை பருப்பு, துவரம் பருப்பு சேர்க்க. மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க. அப்பள துண்டுகள். பாகற்காய் வத்தலை வறுத்து கொள்ளுக. மஞ்சள் பொடி சேர்க்க. அலங்கரிக்க 2 மேஜைகரண்டி வறுத்த பொருட்களை தனியாக எடுத்து வைத்து கொள்ளுக

  4. 4

    பாத்திரத்தில் தக்காளி சேர்த்து வதக்க. 6 கப் நீர் கொதிக்க வைக்க. 10 நிமிடங்களில் வெந்து கொதிக்கும். புளி பேஸ்ட்டை ¼ கப் நீரில் கரைத்து பாத்திரத்தில் சேர்க்க. வெல்லம் சேர்க்க. கொதிக்கட்டும். வத்தல் பொடி சேர்க்க. என் பொடி து, உ, கடலை பருப்புகள், மிளகு, வரமிளகாய், தனியா, மெந்தயம், பெருங்காயம் கறிவேப்பிலை, அரிசி, சீரகம் முதலியவைகளை நல்லெண்ணையில் வறுத்து பொடி செய்தது வேக வைத்த பருப்பை சேர்க்க. குழம்பை கெட்டியாக்க, கடலை மாவை ஒரு கப் நீரில் கலந்து குழம்போடு கிளறவும்,

  5. 5

    4 நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைக்க. கஸ்தூரி மெதியை கையால் தேய்த்து சேர்த்து கிளற. உப்பு சேர்க்க. தனியாக எடுத்து வைத்த தாளிக்கை மேலே போட்டு அலங்கரிக்க.
    வீடு முழுவதும் கம கமவென்று வாசனை வரும். வத்தல் குழம்பு தயார், சுவைக்க.
    குழம்பை சோறோடு 1 தேக்கரண்டி நல்லெண்ணையுடன் கலந்து சுட்ட அப்பளத்தோடு பறிமாறவும்,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes