சிக்கன் பிரியாணி

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

சிக்கன் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
6 பேர்
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 3கப் பாசுமதிஅரிசி (அல்லது சீரக சம்பா)
  3. 5பெரிய வெங்காயம்
  4. 3தக்காளி
  5. 1கைப்பிடி அளவு புதினா
  6. புதினாவில் பாதி அளவு கொத்தமல்லி இலை
  7. 2மிளகாய்
  8. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1.5ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  10. 1ஸ்பூன் கரம் மசாலா
  11. 4டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. 4கப் தேங்காய் பால்
  13. 1/2கப் தயிர்
  14. ஒரு குழிக்கரண்டி அளவு நெய்,
  15. ஒரு குழிக்கரண்டி கடலை எண்ணெய்
  16. தேவையானஅளவுஉப்பு
  17. தாளிக்க:
  18. 3பிரியாணி இலை,
  19. 5கிராம்பு,
  20. 3பட்டை,
  21. 3ஏலக்காய்
  22. 2அண்ணாச்சசி பூ
  23. 1ஸ்பூன் கல்பாசி
  24. 1/2 ஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    புதினா, மல்லித்தழையை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இஞ்சி பூண்டு அரைத்துக் கொள்ளவும்.

    தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு,தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுக்கவும்.

  3. 3

    பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நன்றாக வதங்கினால்தான் பிரியாணி சுவையாக இருக்கும்.

  4. 4

    வதங்கியதும் மிளகாய் தூள்,பிரியாணி மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்க்கவும்.

  5. 5

    தக்காளி மசிந்ததும் சிக்கன் துண்டுகள் சேர்க்கவும். 5நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  6. 6

    இஞ்சி பூண்டு விழுது நன்றாக பச்சை வாசம் போனதும், புதினா, மல்லியிலை அரைத்த விழுது சேர்க்கவும்.பின்னர் தயிர் சேர்த்து கிளறவும்

  7. 7

    3 கப் பாஸ்மதி அரிசிக்கு 6 கப் தண்ணீர் வேண்டும். சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி எனில் 1கப் தண்ணீர் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.எனவே 5கப் தண்ணீர் சேர்த்தால் போதும்.

  8. 8

    இப்பொழுது புதினா,மல்லி மற்றும் இஞ்சி பூண்டு அரைக்கும் பொழுது,மிக்ஸி ஜார் அலம்பிய
    போது கிடைத்த தண்ணீர் 1கப் சேர்த்து,10நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேக விட வேண்டும்.

  9. 9

    சிக்கன் வெந்ததும்,மீதமுள்ள 4கப் தண்ணீர்

    (3கப் தேங்காய் பால் + 1கப் தண்ணீர் அல்லது 4கப் தேங்காய்ப்பால் அல்லது 4கப் தண்ணீர்)

    சேர்த்து
    நன்றாக கொதிக்கவிடவும். கொதித்ததும் உப்பு, காரம்,சரிபார்க்கவும். தேவையெனில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

  10. 10

    பின்,30 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.அரிசி சேர்த்தபின் கொதித்ததும்,மறுபடியும் உப்பு சரிபார்க்கவும் தேவையெனில் சேர்த்துக் கொள்ளவும்.

  11. 11

    மூடி போட்டு நன்றாக வேக விடவும். இப்பொழுது சாதம் முக்கால் பங்கு வெந்துவிட்டது.

    மேலும் தண்ணீர் நன்றாக வற்றிவிட்டது.

    இதன் மேல் புதினா,மல்லித்தழை சிறிதளவு நறுக்கி சேர்க்கவும் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

  12. 12

    இந்த சமயத்தில்,சிறிய பர்னர் உள்ள அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதன்மேல் குக்கரை வைத்து மூடி போட்டு,காற்று புகாத வண்ணம் மேலே ஏதேனுமொரு கனமான பொருளை அல்லது சுடு தண்ணீர் போட்டு,அந்த பானையை வைக்கவும்.

  13. 13

    இவ்வாறு20-25 நிமிடங்களுக்கு சிறு தீயில் வைக்கவும்.

  14. 14

    20 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் தண்ணீர் வற்றி,சாதம் முழுமையாக வெந்திருக்கும்.

    மேலும் ஸ்டவ்வை அணைத்து விட்டு குக்கரை வேறு இடத்திற்கு மாற்றி, இன்னும் 20 நிமிடங்களுக்கு மூடி வைத்து பின்பு பரிமாறலாம்.

  15. 15

    அவ்வளவுதான் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes