வாழைக்காய் பொடி பொரியல்

வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை.

சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் நீக்கி வட்டவடிவில் நறுக்கி தண்ணீரில் போடவும்.
- 2
வெறும் கடாயில் க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய்,தனியா ஆகியவற்றை போடவும்.பிறகு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- 3
ஆறினதும் மிக்ஸியில் போடவும்.வெறும் கடாயில் பச்சரிசியை போடவும்.அதையும் சிவக்க வறுக்கவும்.
- 4
வறுத்த அரிசி ஆறினதும் அரிசியையும் மிக்ஸியில் போடவும்.அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.கடாயில் தே.எண்ணெய் விடவும்.
- 5
எண்ணெய் காய்ந்ததும், கடுகு,க.பருப்பு,உ.பருப்பு போடவும்.பருப்புகள் சிவந்ததும்,வாழைக்காயை போட்டு அதில் உப்பு,ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் போடவும்.
- 6
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.பின்பு மூடி வேக விடவும்.வெந்ததும்,பெருங்காயத்தூள்,வறுத்த பொடி,கறிவேப்பிலை போடவும்.
- 7
பின் நன்கு ஒன்று சேர கலக்கவும்.நன்கு ஃபிரை ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.சுடசுட,*வாழைக்காய் பொடி பொரியல்*தயார்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்