இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
20 பரிமாறுவது
  1. 1 கிலோ அரிசி மாவு
  2. 1/2 கிலோ பாசிப்பருப்பு
  3. 11/4 கிலோ வெல்லம்
  4. 2 தேங்காய் துருவியது
  5. 2 ஸ்பூன் ஏலத்தூள்
  6. சிறிதளவுஉப்பு
  7. 2 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரிசியை ஐந்து முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி உலரவிடவும் லேசா ஈரம் இருக்கும் போது மாவை பொடி செய்து ஜலித்து கொள்ளவும்
    பின் வெறும் வாணலியில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும் மெல்லிய தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுக்கவும்

  2. 2

    பின் வெறும் வாணலியில் பாசிப்பருப்பு ஐ வறுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மலர வேகவிடவும் குழைய கூடாது

  3. 3

    வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் நன்றாக கொதிக்க விடவும் கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
    (1 கப் அரிசி மாவு என்றால் தண்ணீர் 2 கப் அளவு)

  4. 4

    கட்டியில்லாமல் நன்றாக கிளறவும் பின் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் ஏலத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    பின் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கிளறி நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்

  7. 7

    பின் இதை நன்கு ஆறவிடவும்

  8. 8

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கைகளில் அழுத்தி வடிவம் கொடுக்கவும் பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஆவி வந்ததும் கொழுக்கட்டை தட்டை வைத்து 5_8 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes