சிவப்பரிசி பிடி கொழுக்கட்டை(Red rice kolukattai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

சிவப்பரிசி பிடி கொழுக்கட்டை(Red rice kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் சிவப்பரிசி
  2. 1_1/2கப் வெல்லம்
  3. 1 தேங்காய் துருவல்
  4. 150 கிராம் சிவப்பு அவல்
  5. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  6. 1 ஸ்பூன் கருப்பு எள்ளு
  7. 15 முந்திரி
  8. 1/8 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிவப்பு அரிசியை ஆறு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வெயிலில் காய வைத்து எடுக்கவும் பின் மிஷினில் கொடுத்து மாவாக திரித்து ஜலித்து வறுத்து எடுக்கவும்

  2. 2

    பின் அவலை வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் பின் எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும் பின் முந்திரி ஐ சிறிது நெய் விட்டு வதக்கி எடுக்கவும் பின் எள்ளுடன் முந்திரி சேர்த்து பொடித்து கொள்ளவும்

  3. 3

    பின் வாணலியில் வெல்லம் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும் கொதித்ததும் அரிசிமாவு அவல்பொடி எள்ளு முந்திரி பொடி சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பின் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும்

  5. 5

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதை நன்கு அழுத்தி வடிவம் கொடுக்கவும்

  6. 6

    பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் அதில் ரெடியாக உள்ள கொழுக்கட்டை தட்டை வைத்து ஆவியில் 8_12 நிமிடங்கள் வரை வேகவிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes