பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மேல் மாவு செய்ய:
  2. 1 கப் அரிசி மாவு
  3. 2 சிட்டிகை உப்பு
  4. 2 கப் தண்ணீர்
  5. 2 ஸ்பூன் நெய்
  6. பூரணம் செய்ய:
  7. 1 கப் கடலைப்பருப்பு
  8. 1 மூடி தேங்காய்
  9. 1_1/2 கப் வெல்லம்
  10. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  11. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேல் மாவு செய்ய: அரிசி மாவை வெறும் வாணலியில் 2_3 நிமிடங்கள் வரை வறுத்து எடுக்கவும் பின் தண்ணீர் உடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்

  2. 2

    பூரணம் செய்ய: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வேறு தண்ணீர் ஊற்றி 85% வரை மட்டுமே வேகவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்

  3. 3

    பின் கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்

  4. 4

    பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்

  5. 5

    இளம் பாகு பதம் வந்ததும் அரைத்த கடலைப்பருப்பு விழுதை சேர்த்து நன்கு கெட்டியாக கிளறி பின் நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கி ஆறவிடவும்

  6. 6

    பின் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி கொண்டு மாவை தட்டி நடுவில் பூரணம் வைத்து மடிக்கவும்

  7. 7

    பின் ஆவியில் 8_12 நிமிடங்கள் வரை வேகவிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes