சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
- 2
பருப்பு சூடாறியவுடன் நன்கு கழுவி ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 3
பாதி பருப்பு வெந்ததும் பால் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 4
பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
- 5
பாயசம் கெட்டியானதும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும்.
- 6
எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும். கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கினால் பாசிப்பருப்பு பால் பாயசம் தயார்.
- 7
தயாரான பாயாசத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து மேலே தேங்காய் துருவல், குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான பாசிப்பருப்பு பால் பாயாசம் சுவைக்கத்தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15775506
















கமெண்ட் (3)