கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#CF7 #சூப
குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்
இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. ½கப் துவரம்பருப்பு
  2. 1மேஜைகரண்டி தேங்காய் எண்ணை
  3. 1தேக்கரண்டி கடுகு
  4. 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  5. 1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது
  6. ¼கப் கறிவேப்பிலை
  7. சின்ன துண்டு கட்டி பெருங்காயம்
  8. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  9. 1 கப் தக்காளி துண்டுகள்
  10. 1 முழு கருப்பு பூண்டு
  11. 2மேஜை கரண்டி ரச பொடி
  12. தேவையானஉப்பு
  13. ¼கப் கொத்தமல்லி
  14. கறிவேப்பிலை பேஸ்ட் செய்ய:
  15. 1மேஜைகரண்டி எண்ணை
  16. 1மேஜைகரண்டி தனியா
  17. 1மேஜைகரண்டி உளுந்து
  18. 1மேஜைகரண்டி கடலை பருப்பு
  19. 4 வர மிளகாய்
  20. 1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  21. சூப்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    பேஸ்ட் செய்ய: மிதமான நெருப்பின்மேல் ஒரு சாஸ் பேனில் தேவையான பொருட்களை9 (புளி தவிர) வாசனை வரும் வரை. வறுக்க. வறுத்த பொருட்களை 1கப் நீரில் 10 நிமிடம் ஊறவைக்க. புளி சேர்த்து மிக்ஸியில் மழ மழவென்று அரைக்க

  4. 4

    ரசம் செய்ய
    ரசப்பொடி நான் தயாரித்தது புருப்புகள், கொத்தமல்லி விதைகள், மிளகாய், வெந்தயம், சீரகம், மிளகு வறுத்து பொடித்தது
    ¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்
    குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க.
    மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்க. பூண்டு வெளி தோலை நீக்கு; உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்க.

  5. 5

    . 6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. பெருங்காயம் சேர்க்க
    வேக வைத்த பருப்பு, வேக வைத்த மேல் நீரையும் சேர்க்க. `10 நிமிடம் இன் ஹை flame வ்லேமில் கொதிக்க வைக்க; ரச பொடி 1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும். கொதி வந்ததும். கறிவேப்பிலை பேஸ்ட்,சேர்க்க. உப்பு சேர்த்து; 2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார்.
    ருசித்துப் பரிமாறுக. ரசம் குடிக்கலாம். சோறு கூட கலந்து சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes