மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#CF8
குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
5பேர்
  1. சிறியலெமன் அளவு புளி
  2. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. சிறிதளவுமல்லித்தழை
  6. அரைக்க:
  7. 1.5ஸ்பூன்( மிளகு
  8. 2ஸ்பூன் சீரகம்
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. 1சிறிய தக்காளி
  11. 1வரமிளகாய்
  12. 1முழு பூண்டு)
  13. இடிக்க:
  14. 1/4ஸ்பூன்( மிளகு
  15. 1/4ஸ்பூன் சீரகம்)
  16. தாளிக்க:
  17. 2ஸ்பூன் கடலை எண்ணெய்
  18. கடுகு
  19. உளுத்தம்பருப்பு
  20. வரமிளகாய்
  21. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    அரைக்க மற்றும் தட்டி வைக்க வேண்டிய பொருட்களை ரெடியாக வைக்க வேண்டும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுந்து, வரமிளகாய்,கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து பின் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின்,அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின் புளிக் கரைசல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.

  4. 4

    இனி,ரசத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து நறுக்கிய மல்லி தழை சேர்க்கவும்.மல்லித் தண்டு ரசத்திற்கு நல்ல வாசனை கொடுக்கும்,ஆதலால் தண்டையும் கிள்ளி சேர்க்கவும்.

  5. 5

    கடைசியாக இடித்த மிளகு சீரகம் சேர்த்து தூவி,நுரைத்து வரும்போது இறக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான்.சுவையான மிளகு ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes