மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF8 மிளகு ரசம்
இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரைப்பதற்கு
  2. 2 ஸ்பூன் மிளகு
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. 5 பல் பூண்டு
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. கரைப்பதற்கு
  8. சிறியஅளவு புளி
  9. ஒரு தக்காளி
  10. சிறிதளவுமஞ்சள் தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. தாளிப்பதற்கு
  13. 2 ஸ்பூன் எண்ணெய்
  14. அரை ஸ்பூன் கடுகு
  15. கால் ஸ்பூன் வெந்தயம்
  16. சிறிதளவுகறிவேப்பிலை
  17. சிறிதளவுபெருங்காய தூள்
  18. கொத்தமல்லி இலை
  19. இரண்டு வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 5 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    பின்னர் சிறிய அளவு புளி, நறுக்கிய ஒரு தக்காளியை சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  3. 3

    ஊரிய பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மற்றும் அரைத்ததையும் இதோடு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  4. 4

    கலந்த பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய், அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை,2 வரமிளகாய் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி கொள்ளவும்.

  5. 5

    ஊற்றிய பிறகு கொதிக்க விடாமல் நொரை கட்டியதும் பெருங்காய தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  6. 6

    சளி இருமலை விரட்ட கூடிய மிளகு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes