தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)

#CF8
இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.
சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது.
தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)
#CF8
இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.
சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புதினா,மல்லி சேர்த்து ஒரு கையளவு எடுக்கவும்.மசாலா1 மற்றும் மசாலா2-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
சிக்கனை ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை சேர்த்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.அதே சமயத்தில் அரிசியையும் 30நிமிடங்கள் ஊறவைத்து,வடிகட்டவும்.
- 3
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய 2பெரியவெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும்,மசாலா1 மற்றும் மசாலா2 சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின் ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து 5-7நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.வதக்கினால் தான் கவுச்சி வாசம் போகும்.
- 5
பொதுவாக 3.5கப் சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசிக்கு 7கப் தண்ணீர் வைக்க வேண்டும்.
ஆனால்,
மட்டன்,சிக்கன் பிரியாணி எனில் 1கப் தண்ணீர் குறைத்துக் கொள்ளலாம். எனவே,6கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். - 6
இப்பொழுது மிக்ஸி ஜார் கழுவிய தண்ணீர் 1கப் சேர்த்து சிறுதீயில்,மூடி போட்டு சிக்கனை நன்றாக வேக விடவும்.அடிக்கடி கிளறவும்.
- 7
பின்,மீதமுள்ள 5கப் தண்ணீர் சேர்த்து மீடியும் தீயில் வைத்து கொதித்ததும்,உப்பு சரிபார்த்து 10நிமிடங்கள் வேக விடவும்.
- 8
பின் வடிகட்டிய அரிசி சேர்த்து,லெமன் சாறு பிழிந்து,கொதித்ததும் உப்பு சரிபார்க்கவும்.
இந்த சமயத்தில் இருந்து மீடியும் தீயில்,7-10நிமிடங்களில் சாதம் முக்கால் பதம் வெந்து விடும்.
- 9
இந்தப் படத்தில் கரண்டியால் அடிப்பக்கம் தோண்டினால்,தண்ணீர், அதாவது கிரேவி இன்னும் இருக்கின்றது.இப்பொழுது தம் போடக் கூடாது.
- 10
இன்னும் சில நிமிடங்கள் சிறு தீயில் வைத்து விடவும்.இப்பொழுது அடிப்பாகம் கரண்டியால் தோண்டிப் பார்த்தால் தண்ணீர் இருக்காது வற்றியிருக்கும்.இதுதான் அரிசியும்,தண்ணீரும் சமமாக இருப்பது.இந்த நேரத்தில் தான் தம் போட வேண்டும்.
- 11
சிறிய அடுப்பில், சிறு தீயில்,தோசைக் கல் வைத்து,அதில் குக்கர் வைத்து,1ஸ்பூன் நெய் விட்டு மூடி, அதன் மேல் கனமான பொருளை வைக்க வேண்டும்.
- 12
இவ்வாறு 20-25 நிமிடங்கள் வைக்கவும்.பின் அடுப்பை அணைத்து 20 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் உதிரியாக,அடிப்பிடிக்காத பிரியாணி கிடைக்கும்.
- 13
அவ்வளவுதான்.சுவையான தொன்னை பிரியாணி ரெடி.
*இந்த பிரியணியில்,மசாலா 2-ல் சேர்ந்துள்ள மிளகாய் தான் காரம் கொடுக்கும்.நம் காரத்திற்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.
*நான் குறைவான காரத்திற்கான மிளகாய் தான் சேர்த்துள்ளேன்.
* மிளகாய்த் தூள் சேர்த்தால் கலர் மற்றும் சுவை மாறிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)
இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.#myfirstrecipe#goldenapron3 Fma Ash -
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட் (8)