முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.
2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)

1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.
2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
நான்கு பேர்
  1. இரண்டு கப்முடக்கத்தான் கீரை
  2. 2 டீஸ்பூன்மிளகு
  3. ஒரு டீஸ்பூன்சீரகம்
  4. 6சின்ன வெங்காயம்
  5. ஆறு பல்பூண்டு
  6. ஒரு கப்இட்லி மாவு
  7. ஒரு கப்கேப்பை மாவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் முடக்கத்தான் கீரையை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் மிளகு சீரகம் சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டு போட்டு வதக்கவும்.

  3. 3

    பின்னர் சுத்தம் செய்து வைத்த முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கவும் இவை அனைத்தையும் ஆறியபின் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அரைத்த விழுதை அரிசி மாவில் சிறிதளவு கேப்பை மாவில் சிறிதளவு பிரித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது தோசைக்கல்லில் மாவை தோசையாக வார்க்கவும் சுவையான முடக்கத்தான் தோசை ரெடி.

  6. 6

    இப்படி ஒரு விழுதை வைத்து இரண்டு வகையான மாவில் சேர்த்து இரண்டு விதமான தோசையை ருசித்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes