லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#ct
சுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25-30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. கிரேவி:
  2. 2 மேஜைக்கரண்டி நெய்,
  3. 1 மேஜைக்கரண்டி எண்ணை
  4. ½ அங்குலம் சின்னமோன்
  5. 2பிரிஞ்சி இலை
  6. ½ தேக்கரண்டி சீரகம்
  7. ½ அங்குலம் இஞ்சி, தோலுரித்து துருவியது
  8. 7-8 பல பூண்டு
  9. 1 கப் வெங்காயம்,மெல்லியதாக நறுக்கியது
  10. 1 கப் தக்காளி துண்டுகள்
  11. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  12. ¼ தேக்கரண்டி மிளகாய் பொடி
  13. 1 தேக்கரண்டி தனியா பொடி
  14. ⅓ கப் தயிர்
  15. தேவையானஉப்பு
  16. 10-11 முந்திரி
  17. ¼ கப் நீர்
  18. 2பல பூண்டு
  19. மஷ்ரூம் ஃப்ரை:
  20. 1 மேஜைக்கரண்டி எண்ணை
  21. 1 கப் மஷ்ரூம், மெல்லியதாக சீவியது
  22. பன்னீர் வறுக்க:
  23. 2 மேஜைக்கரண்டி எண்ணை
  24. பன்னீர் மறினேட்:
  25. 1 கப் பன்னீர்
  26. தேவையானஉப்பு
  27. ½ தேக்கரண்டி கஸ்தூரி மெதி
  28. ½ தேக்கரண்டி மிளகாய் பொடி
  29. 1 ½ தேக்கரண்டி எண்ணை
  30. அலங்கரிக்க:
  31. 2 மேஜைக்கரண்டி எண்ணை
  32. 3-4பல் பூண்டு, மெல்லியதாக சீவியது
  33. 10புதினா இலைகள்,
  34. கிரேவி

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  2. 2

    தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  3. 3

    கிரேவி
    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான வாணலியில் நெய் எண்ணை சேர்த்து சூடு செய்க, 1 நிமிடம். சின்னமோன், பிரின்சி இலை, சீரகம் சேர்க்க. சீரகம் பொறிந்த பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. வெங்காயம் சேர்த்து வதக்க, 3-4 நிமிடங்கள். வெங்காயம் கண்ணாடி போல ஆனவுடன் தக்காளி சேர்த்து கிளற. மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்குங்கள். 3-4 நிமிடங்கள். நெருப்பை குறைக்க.

  4. 4

    தயிரை அடித்து ஸ்மூத் செய்து இதனுடன் சேர்த்து கிளற. முந்திரி சேர்க்க. க்ரஷ் செய்த பூண்டு சேர்த்து கிளற. சில நிமிடங்கள் பின், 1 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியான பின் அடுப்பை அணைக்க.

  5. 5

    கிரேவியை ஒரு போலில் மாற்றி ஆர வைக்க. ஆறின பின், மிக்ஸியில் சேர்த்து அரைக்க. ஸ்மூத் பேஸ்ட் செய்க; போலிர்க்கு மாற்றுக

  6. 6

    பன்னீர் மெறிநேட்: ஒரு போலில் பன்னர், உப்பு, கஸ்தூரி மெதி, மிளகாய் பொடி, எண்ணை சேர்த்து, விரலால் ஒன்று சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்க. குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில், பன்னீர் சேர்த்து வறுக்க. வறுத்த பன்னீர் தனியே எடுத்து வைக்க. எண்ணையை போலில் இருக்கும் கிரேவியுடன் சேர்க்க.

  7. 7

    மஷ்ரூம் ஃப்ரை: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் எண்ணி சூடு செய்க, ஸூடான பின் காளான் சேர்த்து வதக்க. 5-6 நிமிடங்கள். அடுப்பை அணைக்க. வதக்கிய காளானை தனியே எடுத்து வைக்க
    மிதமான நெருப்பின் மேல் எண்ணை சேர்ந்த கிரேவி சேர்த்து கிளற. சில நிமிடம் பின், 2 கப் நீர் சேர்த்து கிளறி 7-8 நிமிடம் கொதித்து சுண்டட்டும். ஃப்ரை செய்த காளான் சேர்த்து கிளற. உப்பு, சேர்க்க.எல்லா வாசனைகளும் ஒன்று சேர்ந்து கிரேவி மணக்கும். அடுப்பை அணைக்க

  8. 8

    பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. வறுத்த பன்னீர் மேலே போட்டு அலங்கரிக்க.

    குறைந்த நெருப்பின் மேல் சாஸ்பெனில் பூண்டு ஸ்லைஸ் சேர்த்து பொன்னிறம் வரும்வரை வதக்க.

  9. 9

    வறுத்த பூண்டை போலில் இருக்கும் கிரேவி மேல் சேர்க்க. புதினா இலை சேர்க்க. சூடாக கிரேவி பரிமாறுக. சப்பாத்தி, பரோட்டா கூட பரிமாறலாம் சூடாக கிரேவி பரிமாறுக. சப்பாத்தி, பரோட்டா கூட பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes