*மாங்காய் ரசம்*

மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மாங்காயை சுத்தம் செய்து, தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு, 5 நிமிடம் வெந்ததும் தட்டில் ஆறவிடவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், து.பருப்பு, 1/2 டீ ஸ்பூன் ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
மிக்ஸி ஜாரில், பூண்டு, ப.மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
வெந்த மாங்காயுடன், வேகவைத்த து.பருப்பில், 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், நெய், எண்ணெய் தலா 1 ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய் தாளித்ததும், கொரகொரப்பாக அரைத்த விழுது, 1/2 டீ ஸ்பூன் ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பிறகு, மாங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
கொதித்ததும், மீதமுள்ள வெந்த 2டேபிள் ஸ்பூன் து.பருப்பை சேர்த்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். மேலே, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து, ஒன்று சேர கலந்து இறக்கவும்.
- 9
பின் பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு கலக்கவும்.
- 10
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*மாங்காய் ரசம்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 11
குறிப்பு:- இதற்கு, தக்காளி, புளி தேவையில்லை. சூடான சாதத்தில், இந்த ரசத்தை ஊற்றி, நெய் விட்டு, பொரித்த, சுட்ட அப்பளம், வடகத்துடன், சாப்பிட மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*பச்சை மாங்காய் குழம்பு*


*மாங்காய் மசியல்*


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


*மாங்காய், தேங்காய், துவையல்*


*ஒன்பாட் ரசம் சாதம்*


*ஜிஞ்சர் ரசம்*


*மின்ட் துவையல்*


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


*வாட்டர் மெலோன் ரசம்*


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


*சேப்பங்கிழங்கு மசியல்*


*வாழைக்காய் வறுவல்*


*மாதுளம் பழ ரசம்*


*முருங்கைக்காய் பால் கறி*


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)


*கத்தரிக்காய் தொக்கு*


*புதினா துவையல்*


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)


மாங்காய் சாதம் (Mango rice)


*மாம்பழ ஹல்வா*


*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*


*வெண்டைக்காய், புளிக் கூட்டு*


*ஹரியாலி வெஜ் கிரேவி*


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


*தக்காளி, ஊறுகாய்*

கமெண்ட்