ஸ்ட்ராபெர்ரி முஹல்லபியா

Benazir Fathima
Benazir Fathima @cook_17035250

#மகளிர்மட்டும்Cookpad

ஸ்ட்ராபெர்ரி முஹல்லபியா

#மகளிர்மட்டும்Cookpad

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 2 1/2 கப் - டைஜிஸ்டிவ் பிஸ்கட் (பொடித்தது)
  2. 1/2 கப் - வெண்ணை (உருக்கியது)
  3. 1 டின் - கண்டென்ஸ்ட் மில்க்
  4. 500 கி - ஸ்ட்ராபெர்ரி (பாதியாக வெட்டியது)
  5. 500 மிலி - தண்ணீர்
  6. 2 மேஜை கரண்டி - கார்ன் ஃப்ளார்
  7. 1 மேஜை கரண்டி - பன்னீர் (ரோஸ் வாடர்)
  8. 5 மேஜை கரண்டி - ஸ்ட்ராபெர்ரி ஜாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில், பொடி செய்த டைஜிஸ்டிவ் பிஸ்கட் மற்றும் உருக்கிய வெண்ணையை சேர்த்து, ஒரு மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

  2. 2

    பின்பு அந்த மாவை, ஒரு தட்டின் மேல் நன்றாக அழுத்தி, கீழ் அடுக்காக (கீழ் பேஸ்) அமைத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    இதை குளிர் சாதன பெட்டியில், ஒரு 10 நிமிடம் வைக்க வேண்டும்.

  4. 4

    ஒரு கடாயில், கண்டென்ஸ்ட் மில்க், தண்ணீர் மற்றும் கார்ன் ஃப்லார் சேர்த்து, கொதிக்க வைக்கவும். கை- விடாமில் தொடர்ந்து கிளரவும்.

  5. 5

    பன்னீர் சேர்த்து, கலந்தவுடன், அடுப்பை அனைக்கவும்.

  6. 6

    இப்போது தயாரான க்ரீம் மிக்ஸ்சரை, முன்பு தயார் செய்து வைத்த கீழ் பேஸ் (டைஜிஸ்டிவ் பிஸ்கட் லேயர்) மீது ஊற்றி, அறை வெப்பநிலையில் ஆற வைக்கவும்.

  7. 7

    ஆற வைத்த மேல் லேயர் மீதி, பாதியாக வெட்டிய ஸ்ட்ராபெர்ரியை அழகாக அடுக்கி வைக்கவும்.

  8. 8

    இப்பொழுது ஒரு கடாயில், ஸ்ட்ராபெர்ரி ஜாம் சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    கொதித்த ஸ்ட்ராபெர்ரி ஜாம்-ஐ, முன்பு தயார் செய்த மேல் லேயர் மீது ஊற்றவும்.

    சுவையான, இனிப்பான, குளிர்ச்சியான ஸ்ட்ராபெர்ரி முஹல்லபியா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Benazir Fathima
Benazir Fathima @cook_17035250
அன்று

Similar Recipes