கம்பு மாவு இடியாப்பம்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#காலைஉணவுகள

கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பேருக்கு
  1. கம்பு மாவு - இரண்டு கப்
  2. பச்சரிசி மாவு - அரை கப்
  3. உப்பு - கால் தேக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
  5. தண்ணீர் - ஒன்றரை முதல் இரண்டு கப்
  6. இனிப்பு இடியாப்பத்துக்கு
  7. தேங்காய் துருவல். - கால் கப்
  8. நெய். - ஒரு மேசைக்கரண்டி
  9. ஏலக்காய் - இரண்டு
  10. கார இடியாப்பத்துக்கு தாளிக்க
  11. வெங்காயம் - ஒன்று
  12. பச்சை மிளகாய். - ஒன்று
  13. கறிவேப்பிலை. - ஒரு ஆர்க்கு
  14. கடுகு உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  15. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  16. நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
  17. உப்பு - தேவையான அளவு
  18. லெமன் இடியாப்பம் தாளிக்க
  19. லெமன் - ஒன்று
  20. மிளகாய் வத்தல் - இரண்டு
  21. கடுகு உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  22. கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
  23. பெருங்காயம். - ஒரு சிட்டிகை
  24. கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  25. மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை
  26. உப்பு - தேவையான அளவு
  27. நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் கம்பு மாவு, அரை கப் பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். அரைத் தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

  3. 3

    வேக வைத்த இடியாப்பத்தை மூன்று பாத்திரங்களில் பிரித்து எடுத்து வைக்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்திலுள்ள கம்பு இடியாப்பத்தில் தேங்காய் துருவல், சீனி, நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து ஒரு பாத்திரத்திலுள்ள கம்பு இடியாப்பம் சேர்த்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

  6. 6

    இன்னொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மஞ்சள் பொடி, லெமன் ஜூஸ், உப்பு, மீதமுள்ள கம்பு இடியாப்பம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

  7. 7

    சத்தான, சுவையான, ஆரோக்கியமான கம்பு இடியாப்பம் செய்து குடும்பத்தோடு உண்டு மகிழுங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes