எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991

ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. சிறியகத்திரிக்காய் 10 - 12
  2. சிறு எலுமிச்சை அளவு புளி
  3. நறுக்கிய வெங்காயம் 1
  4. தக்காளி துண்டுகள் - 2
  5. மஞ்சள் பொடி சிறிதளவு
  6. நல்லெண்ணெய் 3 மேஜைகரண்டி
  7. வெந்தயம் 1 தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி 4 தேக்கரண்டி
  9. வெல்லம் ஒரு சிறிய கட்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. கடுகு தாளிக்க
  12. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிகாய் நன்கு கழுவி, காம்புகளை அகற்றி நான்காக வாய் கீறி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியை அடுப்பில் வைத்து, வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க பொன்னிறத்தில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின் அடி கனமான சட்டியில் எண்ணெய் ஊற்றி கத்திரிகாயை வதக்கவும். அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி குழைந்தவுடன் அதில் சாம்பார் பொடியை சேர்த்து பிரட்டி புளிகரைசலை ஊற்றவும்.

  6. 6

    உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.வெல்லம் போடவும்.

  7. 7

    நன்கு கொதித்து காய் வெந்து, குழம்பு கெட்டியாகும் பொழுது வெந்தய தூளை சேர்த்து இறக்கவும்.

  8. 8

    கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991
அன்று

Similar Recipes