பீட்ரூட் ரைஸ்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#மதியவுணவு

பீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. பீட்ரூட் - ஒன்று
  2. பாஸ்மதி அரிசி - ஒரு கப்
  3. தண்ணீர் - இரண்டு கப்
  4. தக்காளி - ஒன்று
  5. வெங்காயம் - ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. நெய் - ஒரு மேசைக்கரண்டி
  9. சீரகம் - அரை தேக்கரண்டி
  10. பட்டை - சிறிதளவு
  11. கிராம்பு - நான்கு
  12. ஏலக்காய் - இரண்டு
  13. பிரியாணி இலை - ஒன்று
  14. மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  15. மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட், தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி மசாலா பொருட்களை தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.

  5. 5

    குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes