ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி,
விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். - 2
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டு
- 4
பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, அத்துடன் உப்பு, மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- 5
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரியும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட்