வெஜிடபிள் குருமா

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#GA4#week26

வெஜிடபிள் குருமா

#GA4#week26

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபருக்கு
  1. 1 கேரட்
  2. 8 பீன்ஸ்
  3. 1உருளைக்கிழங்கு
  4. 13 சின்ன வெங்காயம்
  5. 1 பெரிய தக்காளி
  6. 1 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  7. 3/4 ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. தாளிக்க
  12. 1 ஸ்பூன் எண்ணெய், நெய்
  13. 1 துண்டு பட்டை
  14. 2 கிராம்பு
  15. 1 ஏலக்காய்
  16. 1பிரிஞ்சி இலை
  17. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  18. அரைப்பதற்கு
  19. 1 கைப்பிடி தேங்காய்த்துருவல்
  20. 1/2 ஸ்பூன் சோம்பு
  21. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  22. 3 முந்திரிப் பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    இப்பொழுது கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லித்தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும்.

  3. 3

    தேங்காய் சோம்பு பொட்டுக்கடலை முந்திரி இவற்றை அரைத்து காயோடு சேர்த்து கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

  4. 4

    கொத்தமல்லி இலை தூவி பரிமாற வெஜிடபிள் குருமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes