மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)

அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்துக்கறி செய்துகொள்ள வேண்டும் அதற்கு ஒரு கப் மட்டனை குக்கரில் சேர்த்து நன்றாக 10 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும்.
- 3
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,முந்திரி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 4
தேவைக்கேற்ப மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
பின்னர் அதில் வேகவைத்து எடுத்த மட்டன் சேர்த்து ஒரு தோசை கரண்டி வைத்து நன்றாக கொத்தி கொள்ளவும்.
- 6
அதில் ஒரு கரண்டி அரைத்த தக்காளி சாறு சேர்த்து ஒரு தட்டு போட்டு மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும்.
- 7
2 காப்படி பச்சரிசியையும்,3/4 டம்ளர் உளுந்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
- 8
மாவு புளிப்பதற்கு 9 முதல் 10 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும்.
- 9
தோசைக்கல்லை சூடேறிய பிறகு பச்சை அரிசி மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து கல் தோசை ஊற்றிக் கொள்ளவும்.
- 10
அதன்மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தேய்த்து விடவும்.
- 11
அதன் மேல் செய்து வைத்திருக்கும் மட்டன் கொத்துக்கறியை பரப்பி விடவும்.
- 12
பின்னர் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை மேலே தூவி விடவும்.
- 13
ஒரு தட்டு போட்டு மூடி இரு பக்கங்களையும் வைத்து வேக வைத்து எடுத்துக்கொண்டால் மணக்கும் மதுரை மட்டன் கொத்து கறி தோசை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- கேரட் சாதம்
- முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
- பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
- முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
- Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)

கமெண்ட் (7)