சீஸ் கிளவுட் எக்ஸ் -(Cheesy Cloud eggs recipe in tamil)

பெரும்பாலும் நாம் ஆம்லெட் செய்யும் பொழுது முட்டையின் வெள்ளைப் பகுதியையும், மஞ்சள் கருவையும் ஒன்றாக அடித்து தோசைக்கல்லில் தான் ஆம்லெட் செய்வது வழக்கம். அதற்கு மாறாக ஓவனில் பேக் செய்த இந்த கிளவுட் ஆம்லெட் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #worldeggchallenge

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு முட்டைகளை உடைத்து கொள்ளவும்.
- 2
முட்டையின் மஞ்சள் கருவையும்,வெள்ளைப் பகுதியையும் தனி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். முதல் இரண்டு நிமிடத்தில் முட்டை கீழ் கொடுத்து படத்தில் போல் வந்துவிடும்.
- 4
மேலும் தொடர்ந்து முட்டையை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சுமார் 10 நிமிடம் கழித்து முட்டை நல்ல திக்கான கிரீம் போல் வந்துவிடும்
- 5
இந்த ரெசிபி செய்வதற்கு சரியான பக்குவம் எது என்றால் நீங்கள் அடித்த முட்டையின் பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தால், அடித்த வைத்திருக்கும் வெள்ளை முட்டை கீழே விழாமல் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொள்ளும்.
- 6
ஒரு பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் சீட் போட்டுக் கொள்ளவும். அதில் அடித்து வைத்த வெள்ளை முட்டையை மூன்று பாத்திகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்
- 7
பின்னர் ஒரு ஸ்பூனை கொண்டு முட்டையின் நடுப்பகுதியில் ஒரு சிறு குழி வருமாறு செய்து கொள்ள வேண்டும்.
- 8
பின்னர் அதில் உப்பு, துருவிய சீஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 9
பின்னர் இதை ஓவனில் 230 °C இல் ஐந்து நிமிடம் பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 10
5 நிமிடம் கழித்து பேக்கிங் பிரிவை வெளியே எடுத்து, வெள்ளை முட்டையின் நடுவில் செய்த அந்த குழியில் மஞ்சள் கருவை மெதுவாக சேர்த்து விடவும்.
- 11
அதன்மேல் கொஞ்சம் துருவிய சீஸ் சேர்த்து மீண்டும் ஓவனில் 230 °C மூன்று நிமிடம் பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 12
இதோ சுவையான கிளவுட் சீஸ் எக்ஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)