ராஜ்மா புலாவ்/ beans (Rajma pulao recipe in tamil)
#Ga4 இராஜ்மா புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் சன்னமாக அறிந்து கொள்ளவும். ஒரு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொத்தமல்லி தழை பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ரெடி செய்து கொள்ளவும். மசாலா சாமான்கள் எடுத்துக் கொள்ளவும். மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கப் சிவப்பு பின்சை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.மறுநாள், ஊறிய பீன்ஸை இரண்டு சவுண்ட் குக்கரில் வைத்து வேக விட்டுக் கொள்ளவும். ஒரு கப் பாஸ்மதி அரிசியை பிரியாணி செய்வதற்கு 20 நிமிடத்திற்கு முன் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
பிரஷர் பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து உருக்க விட்டு அதில் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு பட்டை, 3 லவங்கம்,1ஸ்டார் மொட்டு, கால் ஸ்பூன் மிளகு, மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து லேசாக சிவக்க வதக்கி கொள்ளவும். சன்னமாக அரிந்தஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதன் பிறகு பொடியாக அறிந்த ஒரு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 4
பிறகு அதில் மஞ்சள்தூள், கஷ்மிரி வரமிளகாய்த்தூள், வரக்கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு சவுண்ட் விட்டு வேக வைத்த சிவப்பு பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பிறகு 20 நிமிடம் ஊறிய பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து விட்டு இவற்றுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
- 5
அரிசி எல்லாவற்றுடனும் சேர்த்து நன்கு கலக்கி சூடு ஏறிய உடன் 2 கப் தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும். குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு சவுண்ட் விடவும். அல்லது அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் விடவும். அடுப்பை நிறுதவிடவும்.பிறகு குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும்.
- 6
சூடாக ஹாட் பேக்கில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி, சிப்ஸ் போன்றவை நன்றாக இருக்கும். சுவையான ராஜ்மா புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
பனீர் கேப்ஸிகம் புலாவ் (Paneer capsicum pulao recipe in tamil)
#cookwithmilkபனீர் எனக்கு மிகவும் பிடிக்கும்.பணீரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நடுத்தர வயதுடைய பெண்கள் கட்டாயம் உணவில் இதை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த வயதில் தான் பெண்களுக்கு எலும்பு தேயமானம் ஆரம்பிக்கும். ஆகவே எலும்பு உறுதிக்கு அடிக்கடி நடுத்தர வயதுக்காரர்கள் பணீர் எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது பனீர், சீஸ் போன்ற பால் பொருட்கள்.அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் நல்லது. பால் பொருட்களை கொண்டு வித விதமாக ஏதாவது அடிக்கடி செய்து தருவது மிகவும் நல்லது. என் தோழி பன்னீர் கேப்சிகம் ரைஸ் செய்வது எப்படி என்று சொல்லி கொடுதது போல் செய்துள்ளேன்.அவர்கள் கூறியது போல் பனீரை மேரினேட் செய்து இந்த புலாவ் செய்துள்ளேன்.நன்றி சிவகாமி🙏 Meena Ramesh -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
#RDவிரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி. Jegadhambal N -
-
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
-
-
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
-
பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)
#nutrient3பீன்ஸ் நார் சத்து அதிகமாக கொண்டது. மலச்சிக்கலை போக்கும். கொழுப்பை கரைக்க உதவும். இந்த பீன்ஸ் புலாவ் முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
More Recipes
கமெண்ட் (6)