சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)

#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, 1\2 தேக்கரண்டி உப்பு, கருஞ்சீரகம், எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும் பின் அதை 20 நிமிடம் நன்றாக மூடி வைக்கவும்
- 2
பின்பு உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் 20 நிமிடம் செம்மல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு உருளைக்கிழங்கின் தோலை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலா, கான்பிளவர் பவுடர், கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
பின்பு அந்த உருளைக்கிழங்கு கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்
- 5
நாம் பிசைந்து வைத்த மைதா மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து நன்றாக ரொட்டி போல தேய்த்து எடுத்துக்கொண்டு இந்த உருளைக்கிழங்கு உருண்டைகளை வைக்குமாறு சிறிய சிறிய நீட்ட பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்
- 6
இந்த நீட்டமான ரொட்டிகளில் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை எடுத்து வைத்து நன்றாக சுருட்டி கொள்ளவும் டூத் பிக்கை கொண்டு மூடவும்
- 7
பின்பு நன்றாக சூடான எண்ணெயில் 5 நிமிடம் நன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes












கமெண்ட் (4)