வெஜ் மஞ்சூரியன் கிரேவி

வெஜ் மஞ்சூரியன் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
சாஸ் செய்யும் முறை : சாஸ் செய்ய தேவையான காய்களை வெட்டவும். சிறிது எள்ளு பின் இஞ்சி துண்டுகள், பூண்டு ஆகியவற்றை வறுத்த பிறகு காய்கறிகளை சேர்க்கவும். பின் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும். உப்பு மிளகு தூள் சேர்க்கவும். கடைசியில் சிறிது கெட்டியாக வருவதற்கு சிறிது மாவு சேர்க்கவும். சிறிது சோயா சாஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- 2
மஞ்சூரியன் செய்வதற்கு: நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மாவு, உப்பு, மிளகு தண்ணீர் சேர்த்து கலக்கவும். கேட்டியான் பேஸ்ட் பதத்திற்கு இருக்கவும்.
- 3
சிறிது மாவில் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருக்க கூடாது. காய்கறி கலவையை சிறு உருண்டைகளாக செய்யவும்.
- 4
மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறத்தில் பொரிக்கவும்.
- 5
பொரித்த உருண்டைகளை கிரேவியில் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்