ஷுஃப்தா

#book
காஷ்மீரின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கம் இது! ஆம் கடந்த 5-6 நூற்றாண்டுகளாக அவர்களின் அனைத்து பாரம்பரிய, மற்றும் சுப நிகழ்வுகளில் தவறாது இடம்பிடிக்கும் ஒரு இனிப்பு வகை. பருப்பு வகைகள், உலர் பழங்கள், பனீர் போன்றவை சேர்த்து செய்வதால இது ஒரு சத்துக்களின் கருவூலம் எனலாம்! இதோ அதன் செய்முறை...

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பனீரை 1 இன்ச் க்யூப்களாக நறுக்கிக் கொள்ளவும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பேரீத்தம்பழங்களை நீளவாக்கால் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் விட்டு நறுக்கி வைத்துள்ள அனைத்து உலர் பருப்புகள், பேரீத்தங் கீற்று, உலர் திராட்சை, தேங்காய்க் கீற்று ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
- 3
பின்பு அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு பனீர் துண்டுகளை போட்டு லேசான பொன்னிறமாக பொறித்தெடுக்கவும் (கவனம் தேவை: அதிக நேரம் பனீரை வறுத்தால் ரப்பர் போன்று கடினமாகி விடும்)
- 4
இப்பொழுது அதே கடாயில் நீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். இதில் வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அதனுடன் பட்டைத் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் சுக்குத் தூள் சேர்க்கவும்
- 5
திக்காக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும் (குங்குமப்பூ மற்றும் ரோஜா இதழ்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்)
- 6
சுவையான காஷ்மீரி ஷுஃப்தா தயார்!!
Similar Recipes
More Recipes

கமெண்ட்