மொறுமொறு வெங்காயப் பூக்கள் (ப்ளூமிங் ஆனியன் பைட்ஸ்)

ஆனியன் ரிங்க்ஸ் சாப்பிட்டு இருப்போம். இது அதைப் போன்ற சுவையை ஒத்தது என்றாலும் சற்று வித்தியாசமானது. குழந்தைகள் என்ன நிச்சயமாக பெரியவர்களும் இதன் பூப் போன்ற வடிவத்திற்காகவே விரும்பி சாப்பிடுவார்கள்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பல்லாரியில் மேல் மற்றும் கீழ் பாகத்தை சிறிது வெட்டி தோல் நீக்கவும்.
- 2
பின்பு மேல் பாகத்தை கீழாக வைத்து அதில் உள்ள நடு பாகம் மட்டும் வெட்டுப் படாமல் நான்கு சரிபாகமாக மேலிருந்து கீழாக வெட்டவும்.
- 3
ஒவ்வொரு நான்கு பாகத்திற்கு மத்தியிலும் முடிந்த அளவிற்கு வெட்டி கவனமாக இதழ்களை விரித்து பூப் போல் செய்யவும்.
- 4
அதனை குளிர்ந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 5
மாவில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பூண்டுப் பொடி,சோள மாவு, ப்ரட் கரம்ஸ் மற்றும் உப்பு போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
- 6
இப்பொழுது வெங்காயத்தை ஒரு தட்டில் வைத்து மாவு கலவையை அதன் மேல் தூவவும். அனைத்து பகுதிகளிலும் உள்ளேயும் வெளியேயும் படுமாறு போடவும்.
- 7
முட்டையை பாலோடு நன்றாக அடித்து வைக்கவும்.
- 8
பின்பு அதனை முட்டை பால் கலவையில் முக்கவும்.
- 9
மறுபடியும் மாவு பிறகு முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.
- 10
எண்ணெய்யை சூடாக்கி மிதமான தீயில் நன்கு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். சூடாக மயோனைஸ் மற்றும் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்