பாவ் பாஜி (காரசாரமான பாவ் பாஜி) (Bav Baji Recipe in tamil)

#என்முதல்ரெசிபி
பாவ் பாஜி (காரசாரமான பாவ் பாஜி) (Bav Baji Recipe in tamil)
#என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பாவ் மசாலா செய்வதற்கு : காளிஃப்ளவரை சுத்தம் செய்து கொள்ளவும். காளிஃப்ளவர், பட்டாணி, உருளைக் கிழங்கு,குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 3
வெங்காயத்தாழ், கொத்தமல்லிஇலை,புதினா இலை,குடைமிளகாய், சீரக கீரை, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 4
வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்க்கவும்.
- 5
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
மஞ்சள் தூள், பாவ் மசாலா பொடி சேர்க்கவும்.
- 7
இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 8
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிஇலை,புதினா, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 9
நன்றாக வதங்கியதும் வேகவைத்த காளிஃப்ளவர், பட்டாணி, உருளைக் கிழங்கு சேர்க்கவும். 1கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
- 10
நன்றாக தண்ணீர் வற்றியதும், சுருள கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும். பாவ் மசாலா தயார்.
- 11
பாவ் பாஜி செய்வதற்கு : அடுப்பில் தவா வைத்து பட்டர் சேர்க்கவும். மிளகாய் தூள், பாவ் மசாலா பொடி, புதினா இலை சேர்க்கவும்.
- 12
பன்னை இரண்டாக கீறிவிட்டு அதன் மேல் வைக்கவும்.
- 13
இரண்டு புறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.
- 14
பாவ் பாஜி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்