தேங்காய் பர்ஃபி 😋 (Thengai Barfi Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெய் உருகியதும் அதில் முந்திரியை உடைத்து சேர்க்கவும். அதனை பொன்னிறமாக வறுக்கவும். பின்பு 2 கப் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது வாணலியில் இன்னும் சிறிது நெய் விட்டு துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். குறிப்பு -(தேங்காயை மிதமான சூட்டில் கருகாமல் வறுத்து எடுக்கவும்)
- 3
இப்பொழுது வாணலியில் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் கால் கப் பால் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்
- 4
சர்க்கரை நன்றாக கரைந்ததும் வறுத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கிளறவும். தேங்காய் நன்றாக சுருண்டு கெட்டியான பதம் வரும்வரை கைவிடாமல் மிதமான சூட்டில் கிளறிவிடவும்
- 5
இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கலந்து விடவும். இதனை நெய் தடவிய தட்டு அல்லது பாத்திரத்தில் சேர்த்து சமன் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் ஆறவைத்து அதனை துண்டுகளாக்கவும்
- 6
இப்பொழுது சுவையான மிருதுவான தேங்காய் பர்பி ரெடி 😋👍
Similar Recipes
More Recipes





















கமெண்ட்