வெங்காயப் பூ பக்கோடா
#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயத்தை தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.இதனை மேல்பகுதி சிறிது நீக்கிவிட்டு படத்தில் உள்ளபடி மேலிருந்து கீழாக முக்கால் பாகத்திற்கு சுற்றிலும் நறுக்கவும்.(ஆழமாக நறுக்கினால் வெங்காயம் உதிர்ந்து விடும்). நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் சேர்க்கவும்.
- 2
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதில் அதில் சேர்த்து நன்றாக மாவு படும்படி பிசிறி விடவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- 3
எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காய பூக்களை சேர்த்து இரண்டு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
- 4
இல்லையெனில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி உதிரி ஆகவும் மாவில் சேர்த்து பொரித்து எடுக்கலாம். அவ்வளவுதான் சுவையான வெங்காய பூ பக்கோடா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- ஆனியன் ஜீரா ரைஸ் ஆனியன் ரைத்தா (Onion Jeera Rice Raitha Recipe in Tamil)
- (Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
- கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
- (Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்














கமெண்ட்