ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)

#ரவை
கடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க.
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவை
கடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். காய்த பாலில், வறுத்து எடுத்த ரவையை சேர்க்கவும்.
- 2
ரவையை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கை விடலாம் கிளறிவிடவும். கெட்டியாக வரும்போது 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறவும்.
- 3
படத்தில் காட்டியவாறு கெட்டி ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது அதை தொடர்ந்து கைவிடாமல் பிசையவும். இப்போது சிறிது சிறிதாக மீதமுள்ள நெய்யை ஊற்றி பிசைந்து கொள்ளவும். கையில் ஒட்டாமல் வருவது தான் பதம்.
- 4
தேவைப்பட்டால் சிறிது நெய்யை கையில் தேய்த்து, அந்த மாவை எடுத்து நமக்கு தேவைபோல் உருட்டி கொள்ளவும்.
- 5
பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நாம் செய்துவைத்துள்ள உருண்டைகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
- 6
தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் சக்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பிசுபிசுப்பு தன்மை வரும்வரை கொதிக்க விடவும்.
- 7
பின் அந்த ஜீராவில் ஜாமுனை சேர்த்து 5 இல் இருந்து 7 நிமிடம் வரை ஊற வைக்கவும். மேலே சிறிதாக நறுக்கி வகுத்துள்ள முந்திரியை சேர்த்தால் சுவையான ஜாமுன் தயார்
Similar Recipes
More Recipes














கமெண்ட்