நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil

மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்து
குறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சோம்பு, மிளகு, கருவேப்பிலை இவற்றை வறுத்து பொடி பண்ணி கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி வதக்கி
- 3
மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்த மசாலா பொடியில் பாதி சேர்த்து வதக்கி கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.
- 5
குக்கரில் கோழிகறி வைத்து,வேகவைக்கவும். விசில் வந்ததும்,தீயை குறைத்து வைத்து 8நிமிடம் கழித்து அடுப்பை அமத்தவும்.
- 6
குக்கரை துறந்து மீதமிருக்கும் பொடியை சேர்த்து வதக்கவும் மல்லி தழை சேர்க்கவும். சுவையான சத்தான கோழி மிளகு கறி தயார்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்