மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena
#kulambu
பச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்.
- 2
மொச்சை இரண்டு விசில் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காய தக்காளி சோம்பு தேங்காய் காச கசா புளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 4
வதகிய கலவையில் மிளகாய் தூள் குழம்பு தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 5
பின்னர் ஒரு பிரஷர் கூகரில் நல்லெண்ணை உற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்
- 6
பின் அதில் வேக வைத்த துவரம் பருப்பு வேக வைத்த மொச்சை பருப்பு சேர்த்து கொள்ளவும்
- 7
பின் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்க வேண்டும்.
- 8
புளி சேர்த்து இருப்பதால் மொச்சை குளையாது.
- 9
சுவையான மொச்சை குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்