அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)

#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
அடைபிரதமன் செய்ய:
- 2
கொதிக்கும் நீரில் அடையை போட்டு இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 3
பின் குளிர்ந்த நீரில் மூன்று முறை அலசி வைக்கவும்
- 4
குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து ஊறவிடவும்
- 5
அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
பால் கொதிக்கும் போது ஊறவைத்த அடையை போட்டு மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 7
அடை முக்கால் பாகம் வரை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 8
பின் அடை நன்கு வெந்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் நெய் விட்டு முந்திரி திராட்சை மற்றும் சாரப்பருப்பை வறுத்து எடுக்கவும்
- 10
பின் ஊறவைத்த குங்குமப்பூ ஐ நன்கு கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
- 11
பின் வறுத்த முந்திரி திராட்சை சாரப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 12
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 13
சுவையான மணமான கேரளத்து அடை பிரதமன் ரெடி
- 14
பலாப்பழ சுழியன் செய்ய:
- 15
மேல் மாவு:
- 16
அரிசி மற்றும் உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 17
பின் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும் சிறிது உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 18
பூரணம் செய்ய:
- 19
கடலைப்பருப்பு ஐ வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 20
பின் ஊறவைத்த கடலைப்பருப்பு ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்
- 21
பருப்பு குழைய விடாமல் கைகளில் அழுத்தினால் நசுக்கினால் போதும்
- 22
பின் தண்ணீர் ஐ வடிகட்டி ஆறவிடவும்
- 23
பலாப்பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 24
பின் சிறிது தண்ணீர் விட்டு எட்டு நிமிடங்கள் வரை வேகவிட்டு வடிகட்டி ஆறவிடவும்
- 25
பின் கடலைப்பருப்பு மற்றும் பலாப்பழத்தை மிக்ஸியில் தனித்தனியாக சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுக்கவும்
- 26
பின் வாணலியில் பாதி அளவு நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுது ஐ சேர்த்து வதக்கவும்
- 27
பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 28
ஒரு கம்பி பதம் வந்ததும் வதக்கி வைத்துள்ள பருப்பு மற்றும் பலாப்பழ கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 29
முதலில் இளகி பின் சேர்ந்து வரும் போது நசுக்கிய ஏலக்காய் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 30
பின் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கெட்டியாக கிளறி இறக்கி நன்கு ஆறவிடவும்
- 31
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 32
நன்கு ஆறவைத்த பருப்பு பலாப்பழ கலவையை நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 33
பின் ரெடியாக உள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்
- 34
பின் மெதுவாக திருப்பி விடவும்
- 35
இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 36
இந்த பூரணம் சாப்பிட பலாப்பழ சுவையுடன் மிகவும் நன்றாக இருக்கும்
- 37
இந்த பூரணத்தை பயன்படுத்தி கொழுக்கட்டை மற்றும் இலை அடை போன்ற உணவுகள் செய்யலாம்
- 38
சுவையான ஆரோக்கியமான அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
- கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)


























கமெண்ட்