கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)

#goldenapron3
#book
கேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3
#book
கேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி மெல்லிய துருவலாக துருவி கொள்ளவும்
- 2
வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை வாசனை போக வதங்கியதும் உதிர்த்த பால் கோவா சேர்த்து நன்கு வறுக்கவும்
- 4
பின் காய்ச்சிய பாலை ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
- 5
பட்டரை தனியாக வாணலியில் ஊற்றி சூடாக்கவும் நெய் மணம் வரும் வரை சூடாக்கி அடுப்பை அணைத்து விடவும்
- 6
பின் பாலுடன் கேரட் நன்கு வெந்து பால் முழுவதும் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 7
சர்க்கரை முழுவதும் கரைந்த பின் முதலில் இளகி பின் சேர்ந்து வரும் போது உருக்கிய பட்டர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் மெல்லிய தீயில் வைத்து வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை தொடர்ந்து கிளறவும்
- 9
ஏலக்காய் ஐ இடித்து தூள் செய்து போடவும்
- 10
சிறிது நெய்யில் முந்திரி திராட்சை ஐ சேர்த்து பொன்னிறமாக வறுத்து போடவும்
- 11
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கிளறி இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 12
சுவையான மணமான ஆரோக்கியமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்