நோன்பு கஞ்சி (Nonbu kanji Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பை கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
அடிகனமான பாத்திரத்தில் 1 கப் அரிசிக்கு 9 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து 45 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி கொத்தமல்லி இலை புதீனா மிளகாய் இல் பாதி சேர்த்து வதக்கவும்.
- 4
கறிமசாலா உப்பு கீமா சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
- 5
அரிசி நன்கு வெந்ததும் நன்கு கடைந்து விட்டு மீதியுள்ள வெங்காயம் தக்காளி மல்லி இலை புதீனா மிளகாய் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 6
கீமா வெந்ததும் கறி குழம்பை கஞ்சியுடன் கலந்து கொள்ளவும்.
- 7
5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்தால் நோன்பு கஞ்சி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
- 🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
- மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
- நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)




கமெண்ட்