உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)

உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை நன்கு அலசிக்கொள்ளவும் பிறகு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்...
- 2
பின்னர் மிக்சி ஜாரில் பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்...
- 3
பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை இட்லி பாத்திரத்தில் இட்லி போல ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும்...
- 4
பின்னர் பாசிப்பருப்பு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக் ஆற விடவும்... பின்னர் ஆற வைத்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிரி உதிரியாக அரைத்து கொள்ளவும்....
- 5
பின்னர் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சையை வறுத்து எடுக்கவும்...
- 6
பின்னர் பாதி நெய் விட்டு அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்...பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்... பின் ஏலக்காய் தூள்,துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி...மீதமுள்ள நெய் சேரக்கவும்....கடைசியாக வருத்து வைத்த முந்திரி பருப்பு திராட்சையை சேர்க்கவும் நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்... மிக சுவையும் ஆரோக்கியமும் தரும் உக்காரு தயார்....
Keywords
Similar Recipes
More Recipes
- வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
- எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
- மெட்ராஸ் புளி குழம்பு (Medras pulikulambu recipe in tamil)
- நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)



கமெண்ட்